உயிர் என்று நான் உருவானதும் தன் உயிர் தந்து 10 மாசம் என்னை பாதுகாத்த பெண் - அம்மா
அன்னை உயிரில் இருந்து தனி உயிராக, பத்திரமாக என்னை உலகுக்கு சேர்த்த பெண் - மருத்துவர்
சக்கரைக்கு இனிப்பு வைத்தாற்போல் செல்லப்பெண் எனக்கு அதிக செல்லம் கொடுத்த பெண் - பாட்டி
பாடம் சொல்லி கொடுத்த பெண் - ஆசிரியை
ரகசியம் பேச எனக்கென்று ஒரு பெண் - தோழி
சிரித்து பேசி அடித்து சண்டை போட ஒரு கூடம் - தோழிகள்
திருமணம் என்ற தருணத்தில் எனக்கு கிடைத்த இன்னொரு தாய் - மாமியார்
தோழி கொஞ்சம் தங்கை கொஞ்சம் எதிரி கொஞ்சம் - சின்ன பெண் அவள் - நாத்தனார்
அவன் உயிரை எனக்குள் சுமந்த பொது என்னக்குள் இருந்த புனிதம் , பெருமை, அனைத்தும் ஒன்று சேர்ந்து நான் உணர்ந்தேன் பெண்ணின் மகத்துவத்தை - தாய் !
பெண்மை ஒரு வரமான வாழ்கை ! மகளிர் தின வாழ்த்துகள் !!!