Wednesday, June 16, 2010

எனக்குள் காதல் கொடுத்தவனே!!!

மனதில் உன்னை சுமந்து கொண்டு 
விழியோரம் உன்னைத் தேடுகிறேன்
என் கதிதான் என்ன?

உன் மீது வந்த காதல் காய்ச்சலின் வெப்பத்தில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்....

நீ என்னை மானே தேனே என்றெல்லாம் அழைக்கவில்லை 

நர்மதா என்று ஒரு முறை அழைத்தாயே 
அதில் தான் மயங்கிவிட்டேன்...



நான் காற்றில் ஒரு கடிதம் உனக்கு அனுப்பினேன்
நீ அனுப்பிய பதில் என் கண்ணத்தை சேர்ந்தது!!!



ஒவ்வொரு சண்டையின் முடிவிலும் தன்னை எரித்து காதலை வளர்த்த கோபங்கள் வாழ்க !!!






இதற்குப்பெயர் தான் காதலா? 
நமக்குள் 
மழை  என்ற  போது தான்  மண்வாசனை.....



நமக்குள்  வெயில்  என்ற  போது தான்  அனல்காற்று......

இன்று  நமக்குள் மழையும்  இல்லை வெய்யிலும் இல்லை,
  ஆனாலும் என் உயிர் மூச்சில் உன்னை உணர்கிறேனே,
   இதுதான் காதலோ ???

இந்த நிமிடம் உன்னை கண்டால்,
ஆனந்தத்தில் அழ மாட்டேன்....
உன்னை அணைத்து முத்தமிடமாட்டேன்....
ஒரு கணம் என் கண்மூடி,
   நான் உயிர் வாழ்வதே.............................

அன்பே!!!!
உனக்கதான்..........
என்பதை உணர்ந்து ரசிப்பேன்!!! 

I

No comments: