Tuesday, April 13, 2010
இன்னும் எனை ஒரு குழந்தையாக!!!
அம்மா வீடு... காலை ஏழறை மணி..
"அடடா தூங்கிவிட்டேனே! இன்னும் ஒரு மணி நேரத்தில் பஸ்.. ஸ்கூலுக்கு லேட் ஆச்சு.. "
பாதி தூக்கத்தில் காபி கேட்டு சமையலறைக்குள் நுழைந்த போது அம்மாவின் புலம்பல் கேட்டது..
"சரி சரி நான் சமைக்கிறேன்.. தழுங்கம்மா.. "
"வேண்டாம்.. உனக்கு பிடித்த கெழங்கு வறுவல், காரட் பொரியல், புளிகொழம்பு வைக்கிறேன்.. நைட் அடிக்கு ஊற வச்சுடறேன். சரியா? ", என் வார்த்தையை காதில் வாங்காத அம்மா
"இன்னும் ஒரு மணி நேரத்துல இதெல்லாம் செய்ய முடியாது, நான் சிம்பிள் ஆ செய்யறேன்"
"வேண்டாம் கண்ணா, நீ பாவம், எப்பயோ வர, கஷ்டபடாத"
"இது என்னம்மா கஷ்டம்? நான் கமலுக்கு சமைச்சு அனுப்பறேன்ல.. அது போலத்தான் "
"அய்யோ!!! என் டைம் வேஸ்ட் பண்ணாத, காபி எடுத்துட்டு போ", அதட்டும் குரலில் அம்மா
"என்னமோ பண்ணுங்க, எனக்கென, லேட் ஆ போய் நல்லா திட்டு வாங்குங்க"..
காலை எட்டறை மணி ...
" கண்ணா, அம்மா கெளம்பறேன், அடுப்படில சாப்பாடு வச்சிருக்கேன். ஈவனிங் சீக்கிரம் வரேன். டாட்டா"
"ஹ்ம்ம்... " என்று திரும்பாமல் சொன்னேன், இத்தனை வயதிலும் என்னை அதட்டியதின் காரணமாக...
மதியம் ஒரு மணி...
எனக்கு பிடித்த அனைத்து உணவும் ஹாட் பாக்ஸ் இல்..
அப்போது தான் உரைத்தது எனக்கு...
இத்தனை வயதிலும் என்னை குழந்தையாக நடத்தும் அவள் பாசம்...
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Tamil new year special ?? Keep up the good work. And yeah puthaandu nal vazhthukal.
டச்சிங் :)
Post a Comment