Tuesday, April 13, 2010

இன்னும் எனை ஒரு குழந்தையாக!!!


அம்மா வீடு... காலை ஏழறை மணி.. 


"அடடா தூங்கிவிட்டேனே! இன்னும் ஒரு மணி நேரத்தில் பஸ்.. ஸ்கூலுக்கு லேட் ஆச்சு.. " 
பாதி தூக்கத்தில் காபி கேட்டு சமையலறைக்குள் நுழைந்த போது அம்மாவின் புலம்பல் கேட்டது..


"சரி சரி நான் சமைக்கிறேன்.. தழுங்கம்மா.. " 
"வேண்டாம்.. உனக்கு பிடித்த கெழங்கு வறுவல், காரட் பொரியல், புளிகொழம்பு வைக்கிறேன்.. நைட் அடிக்கு ஊற வச்சுடறேன். சரியா?  ", என் வார்த்தையை காதில் வாங்காத அம்மா


"இன்னும் ஒரு மணி நேரத்துல இதெல்லாம் செய்ய முடியாது, நான் சிம்பிள் ஆ செய்யறேன்"
"வேண்டாம் கண்ணா, நீ  பாவம், எப்பயோ வர, கஷ்டபடாத"


"இது என்னம்மா கஷ்டம்? நான் கமலுக்கு சமைச்சு அனுப்பறேன்ல.. அது போலத்தான் "
"அய்யோ!!! என் டைம் வேஸ்ட் பண்ணாத, காபி எடுத்துட்டு போ", அதட்டும் குரலில் அம்மா


"என்னமோ பண்ணுங்க, எனக்கென, லேட் ஆ போய் நல்லா திட்டு வாங்குங்க"..


காலை எட்டறை மணி ...


" கண்ணா, அம்மா கெளம்பறேன், அடுப்படில சாப்பாடு வச்சிருக்கேன். ஈவனிங் சீக்கிரம் வரேன். டாட்டா"
"ஹ்ம்ம்... " என்று திரும்பாமல் சொன்னேன், இத்தனை வயதிலும் என்னை அதட்டியதின் காரணமாக...


மதியம் ஒரு மணி...
எனக்கு பிடித்த அனைத்து உணவும் ஹாட் பாக்ஸ் இல்.. 
அப்போது தான் உரைத்தது எனக்கு... 
இத்தனை வயதிலும் என்னை குழந்தையாக நடத்தும் அவள் பாசம்... 

2 comments:

Ash said...

Tamil new year special ?? Keep up the good work. And yeah puthaandu nal vazhthukal.

Sanjai Gandhi said...

டச்சிங் :)