மொட்டை மாடியில் வானத்தை ரசிக்க நின்றேன்
நட்சத்திரங்கள் ஒன்று கூட இல்லையே
என்று தேடித்தேடி பார்த்தே,
விடிந்து போனது..
விடியும் நேரத்தில் தான் கவனித்தேன், அந்த நீல வானத்தின் கொள்ளை அழகை !!!
வந்ததே அந்த வானத்தை ரசிக்கத்தானே?
வராத நட்சத்திரங்களுக்காக வீணாக்கிய நேரத்தில்
அந்த நீல கம்பளியின் அழகில் மூழ்கி திளைத்திருக்கலாம் !!!
வாழ்கையும் அப்படித்தானே !!!
மற்றவருக்காக காத்து காத்து நம் காலத்தை வாழாமல் போகிறோம்!!!
1 comment:
ரொம்ப யோசிக்கிறிங்க போங்க :)
Post a Comment